தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

Date:

இலங்கைக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுப்பதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்குமாறு தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஏனைய நாடுகளுடன் புலனாய்வுப் பகிர்வு வலையமைப்பை அறிமுகப்படுத்தியமை முன்னாள் அரசாங்கத்திற்கு இவ்வாறான அச்சுறுத்தல்களைத் தவிர்க்க உதவியது.

தற்போதைய அரசாங்கம் அவ்வாறான தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த அச்சுறுத்தல்கள் வெளிவருவதை தடுத்திருக்க முடியும்.

வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையிலும் நாட்டிலும் இத்தகைய அச்சுறுத்தல்களின் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறான எச்சரிக்கைகள் சுற்றுலாத்துறையை பாதிப்பது மட்டுமன்றி பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும், இலங்கையின் அந்நிய செலாவணியை நேரடியாக பாதிக்கும், தொழில் வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...