இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொலிஸ் தலைமையகம்

Date:

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் நாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு விசேட அவசர தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் இருக்கும் இஸ்ரேலிய பிரஜைகளின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் தலைமையகம் இன்று  (24) அறிவித்தலொன்றை  விடுத்துள்ளது.

அதன்படி  சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலியர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், அவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ என்பவரை 071-8592651 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.

இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்த விடயங்களுக்காக உங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம் என்பதால், தேவையான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...