இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் விடயத்தில் பாரியளவில் அரசியல் தலையீடுகள்!

Date:

இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் விடயத்தில் கடந்த காலங்களில் பாரியளவில் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.

அதன் காரணமாக அதிகாரிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இவ்வாறான நடவடிக்கை எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு பல்வேறு தொழில்களுக்கு இலங்கையில் இருந்து தொழிலாளர்களை அனுப்பி வருகிறோம். அவ்வாறு அனுப்பும்போது அந்த நாட்டுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமையவே நாங்கள் செயற்பட வேண்டும்.

ஆனால் கடந்த காலங்களில் இஸ்ரேலில் விவசாய துறைக்கு ஆட்களை அனுப்பும் போது பாரியளவில் அரசியல் தலையீடு இடம்பெற்றுள்ளமை தெரியவருகிறது.

குறித்த தொழிலுக்கு ஆட்களை தெரிவு செய்யும்போது, அந்த தொழில்சார் அனுபவம் மற்றும் அதுதொடர்பான அறிவு என்பன தொடர்பில்  பரீட்சை நடத்தி அதில் வழங்கப்படும் புள்ளிகளுக்கமைவே தெரிவுகள் இடம்பெறும். என்றாலும் கடந்த காலங்களில் அரசியல் வாதிகளின் தேவைக்காக அவர்களே ஆட்களை தெரிவு செய்து, குழுக்கள் அடிப்படையில் விவசாய துறைக்கு அனுப்பி இருக்கின்றனர்.

இவ்வாறு சென்றவர்கள் தற்போது அங்கு தொழில் செய்ய முடியாமல் பல்வேறு அசெளகரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அங்கு விவயாத்துறையில் வேலை செய்வதாக இருந்தால், அதற்கு போதுமான அனுபவம் திறமை இருக்க வேண்டும்.

அந்த துறையில் அனுபவம் இல்லாதவர்களுக்கு அதில் தொழில் செய்ய முடியாது. அதனால் இந்த தவறு தொடர்ந்து இடம்பெறுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக அதிகாரிகளும் பல்வேறு அசெளகரியங்களுக்கு ஆளாகி இருந்துள்ளனர்.

சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் இருக்கும்போது, மேலிடத்தில் இருந்து, அவர்களுக்கு உத்தரவு வழங்கும்போது, அவர்கள் அதனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அவ்வாறான நிலைமை கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வருடத்தில் ஒக்டோபர் 29ஆம் திகதிவரை இஸ்ரேலுக்கு 3624பேர் தொழிலுக்கா சென்றுள்ளனர்.

அத்துடன் தற்போது அங்கு யுத்தம் இடம்பெற்று வருகின்றபோதும்  இஸ்ரேலில் அவர்களின் நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்று வருகின்றன.

அதனால் இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கையும்  இடம்பெற்று வருகிறது. எனவே இதன் பின்னர் இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதுடன் துறைசார் பயிலுனர்களை அனுப்புவதற்கே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

மூலம்: வீரகேசரி

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...