குருநாகல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கு செயலமர்வு

Date:

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை நடாத்த சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இக் கருத்தரங்கில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், இலங்கை வக்பு சபை மற்றும் வக்பு நியாய சபை பற்றிய அறிமுகம், பள்ளிவாசல் ஒரு சமூக மையம், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சேவைகள் மற்றும் அதன் செயற்பாடுகள், குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பொது பாடத்திட்ட அறிமுகம் ஆகிய தலைப்புகளில் விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலிருந்தும் தலா மூன்று பேர் வீதம் கலந்து பயன்பெறுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் குருநாகல் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு அஷ்ஷேக். ரி.இஹ்சான் மரிக்கார் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) 0777171445, அஷ்ஷேக். எம்.எம். ஐயூப் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) 0778384845, எம்.என்.எம். சாஜித் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) 0771266136, எம்.என்.எம். ரோசன் (பதில் செயலாளர் – வக்பு நியாய சபை) 0724444778, எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

அன்றைய தினம் பகல் உணவு மற்றும் சிற்றுண்டி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...