நாமல் ராஜபக்சவிடம் இரண்டரை மணிநேர விசாரணை!

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கிருந்து வெளியேறும்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“வழக்கமாக, நம் நாட்டின் அரசியல் கலாச்சாரம் என்னவென்றால், அரசாங்கம் மாறும்போது, ​​​​மற்ற அரசாங்கத்தில் இருந்தவர்களை அழைத்து வந்து விசாரணை செய்வது தான்.

வரச் சொன்னால் வருகிறோம். வேண்டுமென்றே நாட்டு மக்களுக்கு பொய் சொல்லி எங்களைப் பற்றிய தவறான வியூகத்தை உருவாக்கியுள்ளனர்.

2010 முதல் 2015 வரை எனது அலுவலகத்திற்கு ஒருவர் வந்து பணம் கொடுத்துள்ளார் என கூறியே இன்று என்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

இது அநாமதேய முறைப்பாடு. அந்த முறைப்பாட்டின் படி பணம் கொண்டு வந்து எனது அலுவலகத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அது பற்றி என்னிடம் கேட்கப்படுகிறது” என்றார்.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...