துருக்கியில் உள்ள பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்காராவிற்கு அருகில் உள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TAI) மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தற்கொலை குண்டுதாரியாக இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அங்காராவின் மேயர் மன்சூர் யாவாஸ் கூறியதாவது: அங்காராவில் உள்ள TAI வளாகத்தில் நடந்த மோதல் மற்றும் தீவிரவாத தாக்குதலால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.
‘காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம்’ என்றார்.