சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்!

Date:

சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாளில் பெய்தது தான் இந்த வெள்ளபெருக்கிற்கு காரணம் என்று மொராக்கோ நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்ப மண்டல சூறாவளியால் இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பாலைவனம் என்றால், அது சஹாரா பாலைவனம் தான். பூமியின் மிகப்பெரிய வெப்பப் பாலைவனமான இது ஆப்பிரிக்கக் கலாச்சாரம், வரலாறுகளை பிரதிபலிக்கிறது.

அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து செங்கடல் வரை வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதிகளில் சஹாரா பாலைவனம் நீண்டு காணப்படுகிறது. எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ, மேற்கு சஹாரா, மொரிட்டானியா, மாலி, நைஜர், சாட், சூடான் உள்ளிட்ட பதினோரு நாடுகளில் சஹாரா பாலைவனம் இருக்கிறது

ஹாரா பாலைவனம்  3,629,360 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டது சஹாரா பாலைவனம். கிழக்கிலிருந்து மேற்காக 4,800 மைல்கள் நீளம் இருக்கிறது.

இதன் அகலம் வடக்கிலிருந்து தெற்காக 1,118 மைல் அகலம் கொண்டது. இந்த அகலமும் நீளமும் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வருகிறது.

சஹாரா பாலைவனம் பூமியில் மிகவும் வெப்பமான இடங்களில் ஒன்றாகும். கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை 100.4 °F (38 °C) – 114.8 °F (46 °C) வரை காணப்படும். சஹாராவின் வெப்பநிலை காரணமாக அங்கு ஓர் உயிரினம், வாழ்வது என்பது கடினமாகும்.

அதேநேரம் பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், இரவில் வெப்பநிலை வேகமாகக் குறைந்து காணப்படும். சில நேரம் உறைபனிக்குக் கீழே காணப்படும்.

சஹாராவில் அரிதாகவே மழை பொழியும். சில பகுதிகளில் மழை பெய்ய வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் சஹாரா பாலைவனத்தில் திடீர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை வெறும் இரண்டு நாட்களில் பெய்ததால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சஹாரா பாலைவனத்தில் எப்போதுமே வறண்டே காணப்படும் இரிக்கி ஏரி, நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

50 ஆண்டுகளில் முதன்முறையாக மொரோக்கோவில் (Morocco) உள்ள இந்த பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...