ஜனாதிபதி க்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரித்தானிய மன்னர்

Date:

 ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு வழிகாட்டுவதில் சாத்தியமான அனைத்து வெற்றிகளையும் வாழ்த்துவதாக பிரித்தானியா மன்னர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியின் கீழ் இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே உள்ள நெருங்கிய உறவு மேலும் ஆழமடைவதை காண்போம் என மன்னர் சார்ள்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

“C.O.P.29 நெருங்கி வருவதால், நமது சமுத்திரங்களைப் பாதுகாக்கவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும், காலநிலை அபாயங்களைச் சமாளிக்கவும், நமது நாடுகள் கூட்டாளிகளாகவும், நவீன பொதுநலவாய நாடுளின் உறுப்பினர்களாகவும் இணைந்து செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக் அவர்களினால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் சார்ள்ஸ் மன்னரின் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...