இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் திட்டம்; சந்தேகத்தின் பேரில் இருவர் கைது!

Date:

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நம்பகமான தகவல்களுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நேற்று (23) தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை பல நாடுகள் புதுப்பித்துள்ளன.

மேலும், தற்போதுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத் தலங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் தனது குடிமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதேவ‍ேளை, அறுகம்பை பகுதி உட்பட நாட்டின் பல பகுதிகளின் பாதுகாப்பும் நேற்றைய தினம் பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...