தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் இன்றுடன் நிறைவு

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதி திகதி இன்று (08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்களும் அல்லது ஊழியர்களும் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்காமல் இருத்தல் அல்லது குறைபாடுகள் காரணமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படல் போன்ற காரணங்களுக்காக அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் தேர்தல் கடமைகளிலிருந்து நீக்கப்படமாட்டார்கள்.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படாத அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கத் தகைமை பெறமாட்டார்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான அலுவலர்கள் அல்லது ஊழியர்கள்தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்தல் அல்லது அவ்வாறான விண்ணப்பங்களை அத்தாட்சிப்படுத்தாமல் இருக்குமாறு தாபனத் தலைவர்களுக்கும் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தகைமை பெறாத நபர்களை தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்க தூண்டுதலாகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...