பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Date:

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

விநியோகத்திற்கான விசேட தினங்களாக ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 3 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம்  தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (23) கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சனிக்கிழமை தபால் நிலையத்திற்கு வழங்கப்படும்.

நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் பொதுத்தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்காளர் அட்டைகளை வழங்கும் பணிகள் இன்று இடம்பெற்று வருகின்றன.

தபால் மூல வாக்காளர் விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை 759,210 ஆகும். அவற்றில் 21,160 நிராகரிக்கப்பட்டன.

இதன்படி 738,050 பேருக்கு தபால் மூல வாக்களிப்பிற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...