‘பயங்கரவாத தாக்குதலாக’ அவதானிக்கப்படவில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

Date:

”இலங்கை மீதான தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக அவதானிக்கப்படவில்லை” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,” அறுகம்பே உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட தகவல் இஸ்ரேலிய பிரஜை ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் மட்டுமே.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் திட்டத்தின் இலக்கு இஸ்ரேலியர்கள் அல்லாத வெளிநாட்டவர்களோ, இலங்கையர்களோ அல்ல. மேலும் குறித்த தாக்குதல் திட்டம் தொடர்பில் மூன்று இலங்கையர்கள் தற்போது  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது  அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்புக்கு முந்தைய நாள் இரவிலிருந்தே பொத்துவில் பொலிஸ் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம். பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸ், புலனாய்வுப் பிரிவினர், இராணுவம் மற்றும் கடற்படையினர் கடல் பயணங்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

‘அறுகம்பேக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அதைத் தவிர, இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று அவர்கள் எச்சரிக்கை விடவில்லை’.

‘எவ்வாறாயினும், இந்த தாக்குதலின் தன்மை குறித்து எந்த உறுதிப்பாடும் இல்லை. ஆரம்பம் முதலே விசாரணைகள் நடத்தப்பட்டு சில உறுதிப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக,மூன்று பேர் கடைசி நிமிடத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் இலங்கையர்கள். அவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.  ஆனால் சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன” இவ்வாறு நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...