சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்:அமெரிக்க தூதரம் விசேட அறிவிப்பு!

Date:

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது

அத்துடன் அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

எனவே, ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளினது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் பாதுகாப்பு தொடர்பில் 1997 என்ற இலக்கத்துக்குத் தகவல் வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...