புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம் : கல்வி அமைச்சினால் மற்றுமொரு குழு நியமனம்

Date:

2024ம் ஆண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 3 வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு கல்வி அமைச்சு  மற்றுமொரு குழுவினை நியமித்துள்ளது.

கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் கல்வியமைச்சர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் இருவர் மற்றும் பேராசிரியர்கள் இருவர் அந்தக் குழுவில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  எடுத்த தீர்மானத்திற்கமைய, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த குழுவின் ஆய்வு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...