மிகுதிப் பணத்தை வழங்காத நடத்துநர்களுக்கு எதிராக முறைபாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Date:

பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதாவது, பேருந்தில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும் மிகுதிப் பணத்தையும் வழங்காத நடத்துநர்கள் மீது முறைப்பாடு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு, குறித்த முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

மிகுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேருந்து நடத்துநர்களுக்கும், பயணிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

Popular

More like this
Related

‘என் சகோதரியை எண்ணிப் பெருமைப்படுகிறேன்’ அயர்லாந்து அதிபரின் சகோதரி சிறைபிடிப்பு: காசா உதவிக் கப்பலை மறித்த இஸ்ரேல்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற...

எச்.ஐ.வி, சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம்...

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம்...