மெக்சிகோவில் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு

Date:

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

அதில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார்.

60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தேர்தல் நடைபெற்று மூன்று மாதங்களின் பின்னர் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றுக் கொண்டார்.

புகழ் பெற்ற காலநிலை ஆராய்ச்சியாளரான இவர், 2007ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

2018ஆம் ஆண்டில் தேர்தலில் வெற்றியீட்டி மெக்சிகோவின் முதல் பெண் மேயராக இருந்தார்.

2000-2006 வரையில் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...