வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரியும் அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பில் அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தல்!

Date:

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பாக முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

புதிதாக நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக நாட்டுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தது.

அதற்கிணங்க, குறித்த நபர்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைவாக குறித்த அறிக்கை தற்போது வெளிவிவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை கிடைத்ததும் வெளியுறவுத்துறை அமைச்சர், நியமனங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...