எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கட்சி அறிவித்துள்ளது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தை உடைய அரசியல் இயக்கம் என்பதாலும் ஜேவிபியின் வரலாற்று பாரம்பரியத்தை மதிக்கும் அதற்கு உரித்தான கட்சி என்பதாலும் நாங்கள் ஜனாதிபதியை அதிகாரத்திற்கு கொண்டுவந்த மக்கள் ஆணையை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் என விமல்வீரவன்ச அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பாகிடைப்பதற்காக ன்மை தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவின்றி அனுரகுமாரதிசநாயக்க ஆட்சி புரியும் நிலையை ஏற்படுத்து தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி கூட்டணியாகவோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிடபோவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாகவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.