பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழுவால், இலங்கை மாணவர்களுக்கு ‘அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில்’ திட்டத்தின் கீழ் உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (30) காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வு பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஃபீம் உல் அசிஸ் ஆகியோர் தலைமையில் கொழும்பு ரமடா ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது.
இலங்கை மற்றும் பாகிஸ்தானிய மாணவர்களுக்கிடையில் பயனுள்ள அறிவு பரிமாற்றம் மற்றும் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகள் பற்றிய சிறந்த புரிதலை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மருத்துவம், பொறியியல், கட்டிடக்கலை, வணிகக் கல்வி, கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில் பெருமளவான சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.