ஒற்றுமை, கருணை ஆழமான உணர்வை இதயங்களில் ஒளிரவைக்கட்டும்: பிரதமரின் தீபாவளி வாழ்த்து

Date:

– பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் தீபாவளி பண்டிகை வாழ்த்துச்செய்தி

இந்தவிழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச்செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிரவைக்கட்டும்.

இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் நாம், கட்டமைப்பு ரீதியான பாரபட்சங்கள் மற்றும் விளிம்பு நிலைக்குள்ளாக்கப்படல் என்பவற்றுக்கு எதிராகப் போராடுபவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

அனைவரும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரித்தை அனுபவிக்கக்கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப நாம் மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இது.

‘வளமான தேசம் -அழகான வாழ்க்கை’ என்ற எமது அரசியல் கொள்கையின் மூலம் எங்கள் கூட்டு இலக்கானது அனைவரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும், அனைவரையும் உள்ளடக்குவதை உறுதிசெய்வதும் ஆகும்.

இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும்.

இன்று தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள, அமைதியான தீபாவளி வாழ்த்துக்கள்!

 

 

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...