மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி (Galle) மற்றும் மாத்தறை (Matara) மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (30.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.