இஸ்ரேல் மீது நேற்றிரவு சுமார் 400 ஏவுகணைகளை வீசி ஈரான் அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது.
இதில் இஸ்ரேலின் பல முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இருப்பினும், இந்த மோதலில் ஈரான் உள்ளே நுழையவில்லை. ஆனால், ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தது.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த சில தினங்களாக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.
நேற்றிரவு மட்டும் சுமார் 400 ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஈரான் வீசியிருக்கிறது.
90% ஏவுகணைகள் இலக்குகளை சரியாக தாக்கியிருப்பதாக ஈரான் கூறியிருக்கிறது. இஸ்ரேலை பதம்பார்த் ஏவுகணைகள் அனைத்தும் ஹைபர் சோனிக் வகையை சார்ந்தது என்று சொல்லப்படுகிறது.
அதாவது ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் இந்த ஏவுகணைகள் தாக்கும். இதை இடைமறித்து அழிப்பது சாத்தியமில்லை. எனவேதான் தாக்குதல்கள் துல்லியமாக இருந்திருக்கின்றன.
இதனால் இஸ்ரேலில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபரில், ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து இஸ்ரேலில் கூலி வேலைகளை செய்துக்கொண்டிருந்த பலஸ்தீனர்கள் சுமார் 40,000 பேர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்படனர்.
எனவே கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கியது. இதனைடுயடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை, பிரதமர் மோடி சந்தித்த போது இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன்படி, இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.