ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையின் அறிவிப்பு!

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல  உறுமய கட்சியின் தலைவருமான உதயகம்மன்பில நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.

உதயகம்மன்பில வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்திலுள்ள இரண்டு அதிகாரிகளிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை தனது மறுப்பினை உத்தியோகபூர்வமாக இன்று அறிவிக்கவுள்ளனர்.

அத்துடன் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கவுள்ளதாக அருட்தந்தை சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையை எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தவுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில நேற்றையதினம் அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...