உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக 22.08.2024 அன்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தேர்தல் ஆணைக்குழு உரிய மரியாதையுடன் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழு தனது பங்களிப்பை முழுமையாக புரிந்து கொண்டு இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்படுகின்றது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதன் பங்கைக் கருத்தில் கொண்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை விரைவில் நிர்ணயம் செய்ய ஆணைக்குழு செயல்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இடையே முன்னதாக தீர்மானிக்கப்பட்ட எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...