பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உலகம் எங்கும் இஸ்ரேலின் போருக்கு எதிரான போராட்டங்கள் வெடித்திருக்கின்றது என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மே 17 இயக்கம் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் எழும்பூர் தொடங்கி ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை கண்டனப் பேரணி கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதல் உலகப்போரில் ஜெர்மனியர்களுக்கு துரோகம் செய்ததற்கு பரிசாக, பிரிட்டன் தலைமையிலான நேச நாடுகள் யூதர்களுக்கு ஒரு தனி நாட்டை உருவாக்கித் தருவதாக வாக்களித்தார்கள்.
இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களின் வட்டி மற்றும் ஜெர்மனிக்கு எதிரான தேச துரோகத்தின் காரணமாக ஹிட்லர், 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட யூதர்களை கொன்றொழித்தார். அதை நாம் நியாயப்படுத்த முடியாது.
ஆனால் இதை மிகைப்படுத்தி யூதர்கள் அனுதாபம் தேடினார்கள். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பிரிட்டனின் துணையோடு 1948 இல் இஸ்ரேல் தனி நாடாக செயல்படும் என யூதர்கள் அறிவித்தனர்.
மண்ணின் மைந்தர்களான பலஸ்தீனர்களுடைய நிலத்தை அபகரித்து, தங்களுக்கு அடைக்கலம் தந்த பலஸ்தீனர்களுக்கு துரோகம் செய்து ஒரு நாட்டை உருவாக்கினார்கள்.
எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட மத்திய கிழக்கில் ஒரு ரவுடி தேசத்தை உருவாக்கி, அதன் மூலம் அரபு நாடுகளை பீதியின் நிழலில் நிறுத்துவதே பிரிட்டனின் நோக்கமாக இருந்தது. உலகமெங்கும் வாழ்ந்த யூத பிரமுகர்கள் இஸ்ரேலை அங்கீகரிக்க சொல்லி தனது தரப்பு வாதங்களை முன்வைத்து, காந்தியடிகளுக்கு பல கடிதங்கள் எழுதினார்கள்.
ஆனால் காந்தியடிகள், ‘ஒரு நாட்டை அபகரித்து, அதில் இன்னொரு நாடு உருவாகுவதை ஏற்கவில்லை. யூதர்கள் ஐரோப்பாவில் தங்களுக்கு தனிநாடு கேட்டபோது, அங்கு ஏன் பிரிட்டன் அதை அமைத்துக் கொடுக்கவில்லை? எனவும் காந்தியடிகள் அப்போது கேள்வி எழுப்பினார்.
இன்று உலகம் எங்கும் பலஸ்தீன மக்களுக்காக நியாயங்கள் கேட்டு போராட்டம் நடக்கின்றன. மே 17 இயக்கம் ஈழத்தில் இனப்படுகொலை நடந்தாலும், பலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடந்தாலும், ரஷ்யா – உக்ரைன் போர் நடந்தாலும் களத்துக்கு வந்து எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கமாக பணியாற்றி வருகிறது.
இன்று மே 17 இயக்கத்தின் இனப்படுகொலைக்கு எதிரான நடவடிக்கைகளையும், இஸ்ரேலின் போருக்கு எதிரான நடவடிக்கைகளையும் பாராட்டுகிறோம் இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்தார்.