ஒரு மணி நேரம் தோளில் சுமந்து நடந்த காசா சிறுமி: சர்வதேசத்தை கலங்க வைத்த காணொளி

Date:

காசாவில் ஆறு வயது சிறுமி ஒருவர் தனது  சகோதரியை மருத்துவமனையிலிருந்து தெற்கு காசாவில் உள்ள கூடாரம் வரை முதுகில் சுமந்து செல்லும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கமர் எனும் குறித்த சிறுமி அல் – புரேஜ் முகாமில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

இந்த காணொளியில் அந்த சிறுமி “முகாம் மீது குண்டுகள் விழுந்தன, நாங்கள் சிதறி ஓடினோம். அதில், என் தங்கை பிரிந்து சென்றுவிட்டாள்.

அவள் ஓடிவிட்டாள. அதனால், அவளை அழைத்துக்கொண்டு அல் – மவாசிக்கு சென்றேன். அது தொலைவில் உள்ளது. அவளை சுமந்து சென்ற போது, ஒருவர் காரை நிறுத்தி உள்ளே ஏறுங்கள் என்றார்.

பிறகு அவர் சகோதரிக்கு என்ன ஆனது ஏன் சுமந்து செல்கிறீர்கள் என்றார். என் தங்கை மீது கார் மோதியது அதனால் சுமந்து செல்கிறேன் என குறித்த சிறுமி தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த காணெளி சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

மூலம்: பிபிசி தமிழ்

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...