கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்த மியன்மார் அர்ப்பணிப்புடன் உள்ளது: தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு

Date:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மியன்மார் தூதுவர் மலர் தான் டைக் (Malar Than Htaik) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது

இதில் இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் தூதுவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மியன்மாரில் மனித கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பது தொடர்பில் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தூதுவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகள் மற்றும் நீண்டகால கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்த மியன்மார் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தூதுவர் தெரிவித்தார்

மேலும் விவசாயம், கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் மலர் தான் டைக் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...