மேல்மாகாண ஆளுந‌ர் ஹனீப் யூசுபுக்கு மேமன் சங்கத்தால் சிறப்பு கௌரவிப்பு !

Date:

இலங்கை மேமன் சங்கம் மற்றும் உலக மேமன் அமைப்பின் ஏற்பாட்டில்   மேல்மாகாண ஆளுநரும் தொழிலதிபருமான ஹனீப் யூஸுபுக்கு சிறப்பு வரவேற்பு விழாவும் கௌரவிப்பு வைபவமும் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மேமன் சங்க வரவேற்பு நிலைய கேட்போர் கூடத்தில் அண்மையில் நடாத்தப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவினால்  மேல் மாகாண ஆளுநராக நியமனம்  பெற்ற தொழிலதிபர் ஹனீப் யூஸுப்  மேமன் சமூகத்தைச்  சேர்ந்த சிறுபான்மை மக்கள் சமூகப் பிரதிநிதியுமாவார்.
மேல் மாகாணத்தின் 12வது  ஆளுநரான இவர் மேமன் சமூகத்திலிருந்து  ஆளுநராக உயர் பதவி அச்சமூகத்தின் முதலாவது பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேல் மாகாண ஆளுநருக்கான இந்த சிறப்பு பாராட்டு விழாவில் ஸ்ரீலங்கா மேமன் சங்கம் உலக மேமன் அமைப்பின் பெருமளவிலான பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் புரவலர் ஹாசிம் உமர், சமூக ஆர்வலர் சிராஸ் யூனூஸ்  ஆகியோரால் ஆளுநர் பாராட்டப்பட்டதுடன்   சிறப்பு ஞாபகார்த்த சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேல் மாகாண புதிய ஆளுநர் ஹனீப் யூசுப், உலக  மேமன் அமைப்பின்

(World  Memon Organisation) பிரபல  பிரமுகராகவும் அவரது பெரு நிறுவன  சாதனைகளுடன் மேமன் சமூகத்தின  நன்மதிப்பைப் பெற்றதொரு தலைவராகவும் விளங்குகிறார்.

    எம்.எஸ்.எம்.முன்தஸிர்

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...