காசா மக்களை கொலை செய்த குற்ற உணர்ச்சி: இஸ்ரேல் வீரர்களை துரத்தும் மன அழுத்தம்;தற்கொலை எண்ணம்:

Date:

காஸாவில் போர் நடத்தி நாடு திரும்பிய பல இஸ்ரேல் வீரர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் PTSD எனப்படும் post traumatic stress disorder என்று அழைக்கப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாம்.

கடந்த ஓராண்டில் காசாவில் இஸ்ரேலின் போர் காரணமாக 42,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 30 சதவிகிதம் பேருக்கும் அதிகமாக குழந்தைகள் என்று கூறப்படுகிறது. பலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின்படி, இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தீவிரம் அடைந்த போர் உச்சம் அடைந்து உள்ளது. கிட்டத்தட்ட 3 ஆயிரம் வீரர்கள் சுழற்சி முறையில் இஸ்ரேல் சார்பாக இந்த போரில் களமிறக்கப்பட்டு காஸாவில் தாக்கி வருகின்றனர். இந்த காசா போரில் ஈடுபட்ட இஸ்ரேல் வீரர்களுக்கு PTSD எனப்படும் post traumatic stress disorder என்று அழைக்கப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு ஏற்பட்டு உள்ளதாம். இதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன.

1. இஸ்ரேல் சார்பாக காஸாவில் குழந்தைகள் பலர் கொலை செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

2. பல குழந்தைகள் துப்பாக்கியால் நேரடியாக சுடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

3. இப்படிப்பட்ட கொலைகளை செய்த வீரர்கள் நாட்டிற்கு திரும்பியதும் அது தொடர்பான அழுத்தம் இருக்கும். அதை பற்றிய  குற்ற உணர்ச்சி இருக்கும்.

அமெரிக்கா ஈராக்கில் போர் நடத்திய போதும்.ஆப்கானிஸ்தானில் போர் நடத்திய போதும் இப்படிப்பதான் அமெரிக்க வீரர்கள் பாதிக்கப்பட்டனர்.

5. போர் முடிந்து வந்த அமெரிக்க வீரர்கள் PTSD எனப்படும் post traumatic stress disorder என்று அழைக்கப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

6. இதில் பலர் கொலைகாரர்களாக.. துப்பாக்கியால் பொது இடங்களில் சுடக்கூடியவர்களாக மாறினர்.

7. இஸ்ரேலில் இதேபோன்ற நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் வீரர்கள் இதேபோல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

8. இதுவரை பல நூறு வீரர்கள் இஸ்ரேலில் PTSD எனப்படும் post traumatic stress disorder என்று அழைக்கப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர் என்று சர்வதேச ஊடகமான CNN தெரிவித்துள்ளது.

9. பலருக்கும் தூக்கம் இன்மை, கோபம், சாப்பிட, செயல்பட விருப்பம் இல்லாத செயல், கெட்ட கனவு என்று மன ரீதியாக கடுமையான அழுத்தம் ஏற்பட்டு உள்ளதாம்.

10. முக்கியமாக பல வீரர்களுக்கு தற்கொலை எண்ணம் உள்ளது. சிலர் ஏற்கனவே தற்கொலை முயற்சிகளை செய்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...