கூடைப்பந்து செம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி

Date:

மாலைதீவு  கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுப்பர் கிண்ண கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் ஈழத்தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜா  இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுப்பர் கிண்ண கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் செம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றுள்ளன.

இந்தநிலையில், பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை  சேர்ந்த தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜா பங்குபற்றியுள்ளார்.

மாலைதீவினை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை அணி 74:72 என்ற எண்ணிக்கையில் மாலைதீவை வீழ்த்தி  வெற்றி பெற்றது.

மாலைதீவின் மாலே நகரில் செப்டம்பர் 26 முதல் 30 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்ற நிலையில் நான்கு நாடுகளின் அணிகள், குறிப்பாக உலகின் வலிமையான வெளிநாட்டு கூடைப்பந்து வீரர்களுக்கிடையே இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கையின் அணிகள் நாடு திரும்பியுள்ளதுடன் இலங்கை விமானப்படையின் உயரதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...