கொழும்பு, கம்பஹாவில் 03 நாள் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்

Date:

நாட்டில் கடந்த வாரம் நிலவிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால், மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 41,212 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 22 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் மூன்று தினங்களுக்கு, விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இவ்வாறு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டெங்கு நுளம்பு உற்பத்தி தொடர்பாக பொதுமக்கள் அதிக கவனம் செலுத்தவேண்டுமெனவும் தமது வீடுகள் மற்றும் நிறுவனங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...