இலங்கையின் முதன்மையான விளையாட்டு மற்றும் தடகள வர்த்தக நாமமான AVI, அண்மையில் கொழும்பு சிட்டி சென்டரில் (CCC) அதன் பிரத்தியேக வர்த்தகநாம விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்துள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதுமான அதன் 12ஆவது காட்சியறையை அது திறந்து வைத்துள்ளது. இது விளையாட்டு மற்றும் ஆடைத் துறையில் அதன் தலைமைத்துவத்தை மேலும் முன்னோக்கிச் செல்வதை காண்பிக்கிறது. .
கொழும்பு சிட்டி சென்டரின் 1ஆவது மாடியில் அமைந்துள்ள இப்புதிய காட்சியறையானது, வாடிக்கையாளர்களுக்கு AVI இன் முழு அளவிலான உயர் செயற்றிறன் கொண்ட விளையாட்டு சப்பாத்துகள், ஆடைகள், மற்றும் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான அணுகலை வழங்குகிறது.
AVI இன் தயாரிப்பு வகைகளில் பட்மின்டன், கிரிக்கெட், கால்பந்து, மலையேறல், ஓடுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட விளையாட்டு சப்பாத்துகள், சாதாரண சப்பாத்துகள் மற்றும் பாதணிகளின் பரந்த தெரிவுகளும் உள்ளடங்குகின்றன.
இந்த வர்த்தகநாமம் வழக்கமான (casual) ஆடைகள், பயிற்சி உடைகள், ஆண்களுக்கான உள்ளாடைகள், காலுறைகள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய அணிகலன்கள் உள்ளிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்குமான ஆடை அணிகலன்களை வழங்குகின்றது.
ஒவ்வொரு தயாரிப்பும் விளையாட்டு வீரர்களை அவர்களது விளையாட்டுக் கனவுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை விளையாட்டு ஆர்வலர்கள் மகத்துவமான இடத்தை அடைய அவர்களை வலுவூட்டுகிறது.
கொழும்பு சிட்டி சென்டரில் உள்ள புதிய காட்சியறைக்கு மேலதிகமாக, மைட்லண்ட் கிரசன்ட், தெஹிவளை, யாழ்ப்பாணம், கிரிபத்கொடை, குருணாகல், மாத்தறை, நீர்கொழும்பு, நுகேகொடை, பாணந்துறை, இரத்தினபுரி, வெள்ளவத்தை உள்ளிட்ட இலங்கை முழுவதும் 12 முக்கிய இடங்களில் AVI செயற்பட்டு வருகிறது. AVI தயாரிப்புகள் DSI பிரீமியர் விற்பனை நிலையங்களிலும் கிடைப்பதோடு, நாடளாவிய ரீதியில் உள்ள வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட DSI காட்சியறைகளில் அவற்றை இலகுவாக அணுக முடியும்.
“Mission Critical Sportswear” எனும் அதன் வர்த்தகநாம வாசகத்திற்கு ஏற்ற வகையில் நாடு முழுவதும் விளையாட்டு மீதான ஆர்வத்தைத் தூண்டுவதற்கு AVI தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது.
ஒவ்வொரு இலங்கை விளையாட்டு வீரர்களுக்கும், அவர்கள் அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்களாகவோ அல்லது ஆர்வமுள்ள ஆரம்ப நிலை வீரர்களாகவோ இருந்தாலும் அவர்களது செயற்றிறனை மேம்படுத்தி, நம்பிக்கையை அதிகரிக்கும் உயர் மட்ட, சர்வதேச தரத்திலான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதே AVI இன் நோக்கமாகும். இலங்கையில் விளையாட்டு ஆடைகளின் தரத்தை உயர்த்துவதற்கும், விளையாட்டின் விசேடத்துவத்தை நோக்கிய நாட்டின் பயணத்திற்கு ஆதரவளிப்பதற்கும் இந்த வர்த்தக நாமம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் உடற்கட்டு பிரியர்களையும் கொழும்பு சிட்டி சென்டர் காட்சியறைக்கு வருகை தந்து தமது பிரீமியம் வகை சலுகைகளை நேரடியாக அனுபவிக்குமாறு AVI அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. AVI இன் அனைத்து தயாரிப்பு வகைகளையும் வாடிக்கையாளர்கள் www.avi.lk இல் பார்வையிடலாம்.
இங்கு அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே விளையாட்டு காலணிகள், ஆடைகள் மற்றும் அணிகலன்கள் ஆகியவற்றை தனித்தனியாக பார்வையிடலாம். இந்த இணையத்தளமானது, தடையற்ற கொள்வனவுக்கான அனுபவத்தை வழங்குவதோடு, இவ்வர்த்தக நாமத்தின் உயர்தர, சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு ஆடைகளை கட்டுப்படியான விலையில் வழங்குகிறது.
இது பற்றிய மேலதிக தகவலுக்கு, www.avi.lk இணையத்தளத்தை பார்வையிடுங்கள்.