தீபாவளிப் பண்டிகையையிட்டு நவம்பர் 01ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பீ.ஏ.சீ.பி. பமுனு ஆரச்சி இதனை அறிவித்துள்ளார்
அந்த வகையில் மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணம் ஆகிய மாகாணங்களிலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை (31) தீபாவளி தினம் கொண்டாடப்படுவதோடு, மறுநாள் வெள்ளிக்கிழமை (01) விடுமுறை வழங்கப்படுவதன் மூலம் இக்கொண்டாட்டத்தை வார இறுதி நாட்களுடன் இணைத்து செளகரியமாக கொண்டாட மாணவர்களுக்கு வசதியளிக்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த விசேட விடுமுறை தினத்துக்கு பதிலாக நவம்பர் 09 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊவா, மத்திய மாகாண ஆளுநர்களும் இவ்வாறு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.