காத்தான்குடியைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஸீனத் பஸ்லி 3 நிமிடம் 14.செகண்ட்டில் 140 பெருக்கல் கணக்குகளை அபாகஸ் முறை மூலம் தீர்வெழுதி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வு நேற்று (15) செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா தேசியபாடசாலையில் இடம்பெற்றது.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் குறித்த சிறுமி 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் 100 கணக்குகளையும் 3 நிமிடம் 18 விநாடிகளில் 140 கணக்குகளையும் அபாகஸ் முறை மூலம் தீர்வெழுதி சோழன் உலக சாதனையை படைத்திருந்தார்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமை இடம்பெற்ற இந் நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக ‘அஷ்ஷெய்க். யு எல் . மன்சூர் (SLPS1) அதிபர், மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலை, காத்தான்குடி, றிஷாட் ரஹீம் Country Head – SIP Abacus Sri Lanka) சிறப்பு விருந்தினராக இன்ஷாப் நவாஸ் (Business Development Manager SIP Abacus Sri Lanka), நிருஷினி பிரதீபன் (SLPS,SLEAS,SLTES) , பிரதி அதிபர், மட்/மம/மீரா பாலிகா தேசிய பாடசாலை, காத்தான்குடி, ஜேசுதாசன் மோசஸ் உறுப்பினர், பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன், யாசீர் அரபாத் BBA அதிபர், கலந்து கொண்டனர்.