ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்துள்ளதை கண்டித்து 105 நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டுக் கடிதத்தில் கையொப்பமிடப் போவதில்லை என இலங்கை தீர்மானித்துள்ளது மிகவும் கவலையளிக்கிறது.
இந்த கடிதம், குறிப்பாக நடந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியில் மோதல்களுக்கு மத்தியஸ்தம் செய்வதிலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் ஐக்கிய நாடுகள் சபையின் இன்றியமையாத பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
நீதி மற்றும் அமைதிக்கான இந்த கூட்டு அழைப்பில் சேர மறுப்பது நமது நன்கு நிறுவப்பட்ட இராஜதந்திர மரபுகளிலிருந்து குறிப்பிடத்தக்க விலகலைக் குறிக்கிறது என்று இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உலகளாவிய அரங்கில் பலதரப்பு சமாதானம் மற்றும் நீதியை ஆதரிப்பதில் நீண்ட மற்றும் பெருமையான வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்திற்கான நமது உறுதியான ஆதரவு உட்பட, மோதலைத் தீர்ப்பதற்கும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் சர்வதேச முயற்சிகளுக்கு நமது நாடு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்: இத்தகைய முக்கியமான உலகளாவிய விடயத்தில் இலங்கையின் குரல் ஏன் மௌனமாகியுள்ளது? வளர்ந்து வரும் உலகளாவிய ஸ்திரமின்மை காலங்களில், சர்வதேச சமாதானம் மற்றும் இராஜதந்திரத்திற்கான அதன் வரலாற்று அர்ப்பணிப்புகளில் இருந்து இலங்கை பின்வாங்க முடியாது.
பலதரப்பு கொள்கைகளை எப்போதும் முன்னிறுத்தி வரும் ஒரு தேசமாக, உரையாடல்இ அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் முயற்சிகளுடன் நாம் இணைந்திருப்பது இன்றியமையாதது.
அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறும், இலங்கையின் வெளியுறவுக் கொ
ள்கையானது நியாயம், நீதி மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு மதிப்பளித்தல் ஆகிய கோட்பாடுகளில் அடித்தளமாக இருப்பதை உறுதி செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தில் சீனா, பாகிஸ்தான், மாலைதீவு, மலேசியா உள்ளிட்ட 105 நாடுகள் கைச்சாத்திட்டுள்ள போதிலும் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
joint_letter_oct_2024