வடக்கு காசா பகுதியில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமை காரணமாக அங்குள்ள நோயளர்களுக்கான சத்திரசிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்களை தீர்க்கும் வகையில் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை குழுக்களை அனுப்ப சர்வதேச நிறுவனங்களுக்கு காசா சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்களில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ வளங்கள் முற்றிலும் நெருக்கடியில் இருப்பதால், சத்திர சிகிச்சை நிபுணர்களின் உதவியின்றி நிலைமையை சமாளிக்க முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“கடுமையான காயங்களை கொண்டவர்களுக்கு விரைவான மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும்; அதற்கு நிபுணர்கள் ஆதரவு இன்றியமையாதது” என்று காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
இந்த மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சமூகத்தின் உடனடி உதவி மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர்களின் பங்களிப்பை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகள் காசாவிற்கு உதவ முன்வருமா என எதிர்பார்க்கப்படுகிறது.