ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா பொறுப்பேற்பு

Date:

ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா நாட்டின் புதிய பிரதமராக இன்று (01) பொறுப்பேற்றுள்ளார்.

தொடர் மோசடிக் குற்றச்சாட்டுகளால் பிரதமர் புமியோ கிஷிடா பதவி விலகப்போவதாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தார். எனவே, கடந்த 27ஆம் திகதி ஜப்பானின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி அதன் தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பை நடத்தியது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை 9 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். இதில் அவர் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சானா டெய்ச்சியுடனான கடுமையாக போட்டியிட்டு, இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பின்னரே கட்சி தலைமைக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.

அத்தோடு, ஜப்பானில் எதிர்வரும் 2025 ஒக்டோபர் அல்லது அதற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...