உலக தபால் தினத்தினை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை தபாலக ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மாவனல்லை தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தபாலக அதிபர் ஆர்.எம். சிரியானி சந்திரகாந்தி செனவிரத்ன மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை பொறுப்பாளர் சகோதரர் எஸ்.ஐ.எம் பவ்மி அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளையினால் தபாலக ஊழியர்களை கெளரவித்து நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் அலுவலக தேவைக்கு தேவையான காகி தாதிகள் மற்றும் தபால் ஊழியர்களுக்கு கடிதங்களை பகிர்ந்தளிக்க Bagஉம் வழங்கப்பட்டது.