மன நல விழிப்புணர்வு மாதத்தை அர்த்தமுள்ளதாக்க TikTok முன்னெடுத்துள்ள விசேட வேலைத்திட்டம்

Date:

ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் TikTok-இல் இணைகின்றனர்.

அவர்கள் அதில் இணைவதன் மூலம் தங்களுக்கு பொருத்தமான உறவுகளை வளர்த்துக் கொள்வதையும், நண்பர்களைக் கண்டுபிடிப்பதையும் எதிர்பார்க்கிறார்கள்.

இங்கு #MentalHealth மற்றும் #MentalHealthAwareness தொடர்பான உரையாடல்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இது தொடர்பான காணொளிகளை 20 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

TikTok-இன் நோக்கம் மக்களுக்கு அவர்களின் மன நலம் குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தகவல்களையும் கருத்துக்களையும் பரிமாறும் தளத்தை உருவாக்குவதாகும்.

குறிப்பாக மக்கள் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஊடகமாக இருப்பதால், TikTok இதற்கு சிறந்த வாய்ப்பை உருவாக்குகிறது.

மன நல விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு இதை மேலும் மக்களிடம் கொண்டு செல்ல அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

டிஜிட்டல் நல்வாழ்வுடன் பயனர்களை வலுப்படுத்துதல்

ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான பழக்கவழக்கங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, அவற்றை ஊக்குவிக்க TikTok செயல்படுகிறது.

குறிப்பாக, டிஜிட்டல் நல்வாழ்வு கருவிகள் மூலம் பயனர்கள் தங்கள் நேரம், உள்ளடக்கம் மற்றும் தொடர்புகளை சிந்தித்து நிர்வகிக்கும் திறனை வழங்கி, பாதுகாப்பான TikTok சூழலை உருவாக்கி, பயனர்களுக்கு சமநிலையான உறவுகளை பராமரிக்க வாய்ப்பளித்துள்ளது. இதற்காக பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

இளம் பயனர்களுக்கு மேலும் முக்கியமான பழக்கங்களை உருவாக்கத் தேவையான பங்களிப்பினை வழங்கும் வகையில், நாளாந்த திரை நேர வரம்புகளை TikTok அமல்படுத்தியுள்ளது. 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் பயன்படுத்தும் வகையில் இந்த வரம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தங்கள் குழந்தைகளின் டிஜிட்டல் அனுபவங்களை பெறுவதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ள பெற்றோர்களுக்கு, குழந்தைகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.

இந்த சிறப்பம்சங்கள் மூலம் பயனர்களுக்கு ஏற்ற வகையில் TikTok தளத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், TikTok வழங்கும் screen time dashboard உம் மிகவும் முக்கியமானது. பயனர்களுக்கு நாளாந்த செயல்பாடுகள் பற்றிய புரிதலை வழங்கும் இது, அவர்களின் திரை நேரம் மற்றும் செயலில் உள்ள நேரங்களின் அடிப்படையில் தொடர்புடைய சாதனங்களை காட்டும் திறனையும் வழங்குகிறது.

இதற்கு மேலதிகமாக, பயனர்களின் இடைவேளைகளை ஊக்குவிக்கவும், சோர்வைக் குறைக்கவும், அவர்களுக்கு ஏற்ற வகையில் ஓய்வு எடுக்க நினைவூட்டல்களை அமைக்கக்கூடிய தனிப்பயன் இடைவேளை நினைவூட்டல்கள் (Custom break reminders) மூலமாகவும் ஆரோக்கியமான அனுபவத்தை வழங்க TikTok நடவடிக்கை எடுத்துள்ளது.

மன நல ஆலோசகர்கள் மற்றும் நம்பகமான நிறுவனங்களுடன் கூட்டுறவு

TikTok-இன் மிகவும் வலுவான திட்டமாக மன நல ஆலோசனைக்காக அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் படைப்பாளர்களுடனான கூட்டாண்மையைக் குறிப்பிடலாம்.

உலக சுகாதார ஸ்தாபனம், பிராந்திய மன நல அமைப்புகள் மற்றும் மன நலத்திற்காக பாடுபடுபவர்களுடனான இந்த கூட்டுறவு மூலம், நம்பகமான, துல்லியமான தகவல்களை பார்வையாளர்களுக்கு வழங்க TikTok  இற்கு முடிந்துள்ளது.

மேலும், நம்பகமான நிபுணர்களுடன் இணைந்து பல்வேறு மன நல தலைப்புகள் குறித்து பயனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கவும் TikTok செயல்படுகிறது.

Dr. Sasha Hamdani மற்றும் Joel Bervell போன்ற ADHD மேலாண்மை முதல் சுகாதார பாதுகாப்பு அணுகல் வரையிலான பிரச்சினைகளை புரிந்துகொள்ள உதவும் உள்ளடக்க படைப்பாளர்களை உருவாக்கவும் அதற்கு முடிந்துள்ளது.

இவை மன நலத்தை அன்றாட உரையாடல்களில் சேர்க்க, அது தொடர்பான தவறான கருத்துக்களை உடைக்க மற்றும் அறிவை வழங்க உதவியுள்ளன.

Selena Gomez இனால் ஆரம்பிக்கப்பட்ட Rare Impact Fund உடன் இணைந்து மன நலத்திற்கான தனது அர்ப்பணிப்பை வலியுறுத்தும் TikTok, இந்த நிதிக்கு 250,000 அமெரிக்க டொலர்கள் பங்களிப்பு வழங்கியதையும் இங்கு குறிப்பிடலாம்.

மன நலத்தை மேம்படுத்த hashtag மற்றும் சமூக சவால்களை ஊக்குவித்தல்

Hashtag அடிப்படையிலான பிரச்சாரங்கள் மூலம் சமூக ஈடுபாட்டை அதிகரிக்கும் TikTok, இந்த மன நல விழிப்புணர்வு மாதத்தில் MentalHealthAwareness: Better Together என்ற முயற்சியை ஆரம்பித்துள்ளது.

இது பயனர்களுக்கு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள, தகவல்களை வழங்க, சவால்களை எதிர்கொள்பவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது.

மேலும், மன நல உள்ளடக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும், நல்வாழ்வை மேம்படுத்த தேவையான வளங்களை அணுகவும் இது வாய்ப்பளிக்கிறது.

இந்த ஆண்டு குறிப்பாக #MentalHealth hashtag மீது அதிக கவனம் செலுத்தியுள்ள TikTok, பயனர்களுக்கு அது தொடர்பான காணொளிகள், நிபுணர் ஆலோசனைகள் மற்றும் ஊக்கமளிக்கும் கதைகளைக் கண்டறியும் வாய்ப்பை வழங்குகிறது.

இந்த உள்ளடக்கங்கள் மூலம் மன நலம் பற்றிய தகவல்களை எளிதாக அணுகும் வாய்ப்பை TikTok அனைவருக்கும் வழங்கியுள்ளது.

படைப்பாற்றல் மிக்க டிஜிட்டல் வெளியில் பயனர்களின் படைப்புகளைப் பகிர்வதன் மூலம் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், மன நல நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், அதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் இருக்கும் TikTok, மன நல விழிப்புணர்வு மாதத்தில் இதை மேலும் அர்த்தமுள்ளதாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...