தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதால் போராட்டம் ஓயப்போவதில்லை என அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு இரங்கல் தெரிவித்துள்ளது.
நேற்று காசாவில் இடம்பெற்ற நேருக்கு நேர் இரு தரப்பு போரில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹியா சின்வாருடைய படுகொலையை தொடர்ந்து அவருக்கான இரங்கல் செய்தியில் ஹமாஸ் இயக்கத்தின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
மேலும் எம்முடைய போராட்டமானது பலஸ்தீனை விடுவிக்கும் வரை ஒயப்போவதில்லை என் றும் தலைவர்களை படுகொலை செய்வதால் அப்போராட்டம் தணியப் போவதில்லைஎன்றும் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.