தேசபந்து தென்னகோன் நியமனம்; ரணிலை பிரதிவாதியாக பெயரிட அனுமதி

Date:

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று (29) அனுமதி வழங்கியது.

அரசியலமைப்பிற்கு முரணான வகையில் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இளம் ஊடகவியலாளர்களின் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு இன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த மனு ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியுள்ளமையால் அவரது விடுபாட்டுரிமை நிறைவடைந்துள்ளதாக, குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர் தரப்பின் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மன்றில் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய ரணில் விக்ரமசிங்கவின் பெயரை மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடுவதற்கான இயலுமை காணப்படுவதாக விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.

 

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு அனுமதி வழங்கியது.

 

முன்னதாக இந்த மனு மற்றும் இதனுடன் தொடர்புடைய 7 மனுக்கள் தொடர்பான விடயங்கள் உயர் நீதிமன்றத்தால் ஆராயப்பட்டிருந்தன.

குறித்த விடயங்கள் ஆராயப்பட்டதன் பின்னர் கடந்த ஜூலை 24ஆம் திகதியன்று மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கி மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அமுலாகும் வகையில் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபர் பதவியில் செயற்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவும் நீதியரசர் குழாத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...