தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தமது பரிந்துரைகளை விரைவில் முன்வைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை இன்று (21) ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர் தமது ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு பிற்போடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.