இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு 02 நினைவு முத்திரைகளை வெளியிடும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய இந்த நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்காக இரு தரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
அதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் பாகிஸ்தான் அஞ்சல் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசன சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் தேசிய ஒருமைப்பாடு
சமூகப்பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது