பிரான்ஸ், இத்தாலி உட்பட இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய 40 நாடுகள்!

Date:

லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன், அவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கும் இந்த 40 நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில், அமைதிப்படையினரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தாங்கள் கருதுவதாக அந்த 40 நாடுகளும் தங்களின் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஐ.நா அமைதிப்படையினர் மீதான தாக்குதல் என்பது ஒருபோதும் ஏற்க முடியாது என்பதுடன், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிய முறைப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...