புத்தளம் மரிக்காரின் ‘இரகசியங்கள்’ மற்றும் ‘மைத்துளிகள் மரணிப்பதில்லை’ நூல் வெளியீட்டு விழா

Date:

பிரபல சமூக கவிஞர் புத்தளம் மரிக்காரின் ‘இரகசியங்கள்’ மற்றும் ‘மைத்துளிகள் மரணிப்பதில்லை’ என்ற இரு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை 5ஆம் திகதி புத்தளம் இஸ்லாஹியா மகளிர் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.

சிறப்பான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் அவர்களும் விசேட அதிதிகளாக வலம்புரி கவிதா வட்டம் தலைவர் கவிமணி N.நஜ்முல் ஹுசைன், ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் இஸட். என் சன்ஹிர், தமிழ்த்தென்றல் அலி அக்பர், சிரேஷ்ட சட்டத்தரணி கவிஞர் ரஷீத்  இம்தியாஸ், வலம்புரி கவிதா வட்டம் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் மின்ஹாஜ் (இஸ்லாஹி)ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கௌரவ அதிதிகளாக கலாபூஷணம் ஜவாத் மரிக்கார் உட்பட இன்னும் பலர் கலந்துகொள்வதோடு பிரபல கவிஞரும் எழுத்தாளருமான ஒலிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் இந்நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...