புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Date:

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாத்தாள் கசிந்ததாக தெரிவிக்கப்படும் கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு  (24) உச்ச நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், அவற்றை நவம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பிறகு, மனுவில் உள்ளவற்றை சரிபார்க்க நவம்பர் 18ம் திகதிக்கு அழைப்பு விடுக்க உத்தரவிடப்பட்டது.

குறித்த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குழுவொன்று தமது பெற்றோருடன் இணைந்து இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...