பொதுத் தேர்தல்: நாடு முழுவதும் 13,412 வாக்குச் சாவடிகள்

Date:

நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,765,351 வாக்காளர்களுக்கு வசதியாக 1,204 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

ஆகக் கூடுதலாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தில் 1,212 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதோடு, இம்மாவட்டத்தில் 1,881,129 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,024,240 வாக்காளர்களுக்காக 735 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளன.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...