மகளிர் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ்

Date:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி புதிய சாதனைகளை படைத்துள்ளது. கடந்த நாள் நடந்த கடைசி லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் 57 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அஃபி ஃபிளெட்சர் 3 விக்கெட்டுகள் மற்றும் கேப்டன் ஹீலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் 142 ரன் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஹீலி மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப் தொடக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் முதலில் 102 ரன்கள் சேர்த்து அணிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்தனர். கியானா ஜோசப் 52 மற்றும் ஹீலி மேத்யூஸ் 50 ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி மகளிர் டி20 உலகக்கோப்பையில் அதிகமுறை அரையிறுதியில் முன்னேறிய 2ஆவது அணி ஆகி சாதனைப் படைத்துள்ளது.

மேலும், இந்த போட்டியில் ஹீலி மேத்யூஸ் தனது 100ஆவது சர்வதேச டி20 போட்டியில் அரைசதம் கடந்து, 100 ஆட்டங்களில் அரைசதம் அடித்த 5ஆவது வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார்.

இப்போட்டியின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடரில் அரைசதம் கடக்கும் 2வது முறை சாதனைப் படைத்துள்ளது.

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...