மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்ற இஸ்லாமிய சிந்தனைக்கும் நாகரீகத்துக்குமான சர்வதேச நிருவகத்தில் ((ISTAC-IIUM) கலாநிதி பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டு வரும் அஷ்ஷெய்க் அர்க்கம் நளீமி பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகத்துக்குமான பட்டப்பின் கற்கைகள் மாணவர் ஒன்றியத்தின் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம் பெரும்பான்மை சிறுபான்மை தேசங்கள் என 102க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலும் இஸ்லாமிய உலகின் முன்னணிக் கல்விக் கூடமான மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும்
மாணவர் ஒன்றியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட அஷ்ஷெய்க் அர்கம் நளீமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்