முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றிக்கொள்ள படையெடுத்து வந்தபோது ஒரு நாய் தன்னுடைய குட்டிகளை பாதுகாப்பதற்காக முயற்சிப்பதை அவதானித்தார்கள்.
அக்குட்டிகள் தன் தாயைச் சூழ பால் அருந்துவதற்காக தாயிடம் வருகின்றன. இச்சூழ்நிலையை அவதானித்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடன் படைகளில் வருகின்ற படையினர், தாயையையும் குட்டிகைளையும் அவதானிக்காமல் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் துபைல் பின் ஸுராக்கா அவர்கள் என்ற தோழரை விழித்து சொன்னார்கள்.
‘இந்த இடத்தில் காணப்படுகின்ற நாய்களையும் குட்டிகளையும் எந்தவொரு பாதிப்புகளும் உள்ளாகாத வகையில் கவனமாக நடந்துசெல்லக்கூடிய ஒரு ஏற்பாட்டை செய்யுமாறு‘ பணித்தார்கள்.